திருப்பத்தூர் எஸ்.எம்.எச். வளாகத்தை சேர்ந்தவர் பெஞ்சமின் (வயது 50). இவர் திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறையில் சாலை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று சிவகங்கை சாலையில் நடந்து சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த வாசுகி (50) என்பவர் கையை காட்டி அழைத்ததாகவும், அப்போது தன்னிடம் அழகான பெண் இருக்கிறது. உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி விபசாரத்துக்கு அழைத்ததாக தெரிகிறது. இது குறித்து பெஞ்சமின் திருப்பத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்த வாசுகி மற்றும் 32 வயது பெண்ணை கைது செய்தனர். மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் வாசுகியை நிலக்கோட்டை சிறைச்சாலையிலும், அந்த பெண் மதகுபட்டியில் உள்ள ஆதரவற்ற இல்லத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளார்.