பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் இடையே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று ஊட்டி நகராட்சி சுகாதார அதிகாரிகள் நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தியதும், விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக அந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய வியாபாரிகளுக்கு ரூ.1,700 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.