பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட செயலாளர் கமல்ராஜா தலைமை தாங்கினார். நகர செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நகர ஐ.டி. பிரிவு கண்ணன், சாக்கோட்டை நகர செயலாளர் செல்வராஜ்லெவே, நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் மாயன், சாக்கவயல் ஊராட்சி செயலர் இளங்கோவன், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.