நத்தம் அருகே தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு

நத்தம் அருகே தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2021-07-10 16:50 GMT
நத்தம்:
நத்தம் அருகே பன்னியாமலையை சேர்ந்தவர் வீரசின்னு(வயது 40). இவரது தோட்டத்தில் மலைப்பாம்பு கிடப்பதாக நத்தம் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) லட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பன்னியாமலைக்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனத்துறையினர் மூலம் கரந்தமலை வனப்பகுதியில் விடப்பட்டது. தோட்டத்துக்குள் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்