கிணற்றுக்குள் விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு
கிணற்றுக்குள் விழுந்த விவசாயி உயிருடன் மீட்கப்பட்டார்.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வீரஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயமு45). விவசாயியான இவர் நேற்றுமுன்தினம் இரவு ஆடுகளுக்கு இரை தேடி தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது இரவு நேரம் என்பதால் நிலைதடுமாறி 50 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்துள்ளார். அவர் நீண்ட நேரம் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் அவரது தோட்டத்திற்கு தேடிச் சென்றுள்ளனர். அப்போது குமரேசன் கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்து, கமுதி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து ள்ளனர். தீயணைப்பு நிலைய அதிகாரி பழனி மற்றும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றுக்குள் விழுந்து படுகாயம் அடைந்த குமரேசனை உயிருடன் மீட்டனர். உடனே அவர் மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து மண்டல மாணிக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.