திருவையாறு அருகே மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு

திருவையாறு அருகே மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-07-10 14:15 GMT
திருவையாறு,

திருவையாறை அடுத்த மேலத்திருப்பூந்துருத்தியில் கடந்த சில தினங்களாக அடிக்கடி தொடர் மின்வெட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மின்வெட்டை கண்டித்து கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோஸ்பின்சிசாரா, ஜம்புலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்தினர். இதில் மின்வாரிய உதவிபொறியாளரிடம் பேசி உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்