சாத்தனூர் அணையில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன

சாத்தனூர் அணையில் மீன் வளர்ப்புக்காக 2 லட்சம் மீன் குஞ்சுகள் நேற்று விடப்பட்டன.

Update: 2021-07-10 13:53 GMT
தண்டராம்பட்டு

மீன் வளர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்படடு அருகிலுள்ள சாத்தனூர் அணை மிகவும் பிரசித்தி பெற்றது. 119 அடி உயரம் கொண்ட அணையில தற்போது நேற்று மாலை நிலவரப்படி 80 அடி தண்ணீர் உள்ளது. சாத்தனூர் அணை மூலம் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இவை மட்டுமல்லாமல் 50-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டம், மின் உற்பத்தி போன்றவை சாத்தனூர் அணை மூலம் நடைபெற்றுவருகிறது. 

மேலும் மீன் வளர்ப்பு மற்றும் விற்பனை பணிகள் மீன் வளர்ச்சி கழகம் மூலம் நடைபெற்று வருகிறது. இதற்காக குத்தகை விடப்படுகிறது. குத்தகைதாரர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்ப்பது வழக்கம்.

2 லட்சம் மீன் குஞ்சுகள்

அதேநேரத்தில் அணையில் நாள் தோறும் டன் கணக்கில் மீன்களை பிடித்து தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.  சாத்தனூர் அணையில் குறிப்பாக ரோகு, கட்லா ரக மீன்களை வளர்த்து விற்பனை செய்துவருகின்றனர்.
இதற்காக நேற்று தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் குத்தகைதாரர்கள் மூலம் நேற்று 2 லட்சம் கட்லா, ரோகு மீன் குஞ்சுகளை சென்னை மீன் வளர்ச்சி கழக மேலாளர் சுகுமார் தலைமையில் சாத்தனூர் அணையில் விடப்பட்டன.

நிகழ்ச்சியில் உதவி மேலாளர்கள் ராம்குமார், செல்வகணபதி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்