நாகூர் பகுதியில் சாராயம்-மதுபாட்டில்கள் கடத்திய 4 பேர் கைது

நாகூர் பகுதியில் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-10 10:24 GMT
நாகூர்,

மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீ்சார் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கீழவாஞ்சூர் பகுதியில் இருந்து சந்தேகப்படும்படி நடந்து வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணமாக பதில் கூறியதால் அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர். இதில் புதுச்சேரி சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் இருந்தது.மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சித்தாம்பூர் பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி மகன் வினோத்குமார் (வயது 24), திருக்குவளை அவணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணி மகன் அசோக் (38) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 லிட்டர் சாராயம், 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதேபோல நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மதுபாட்டில்கள் கடத்தி வந்த நாகை நம்பியார் நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் சத்திவேல் (30), நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்த டேவிட் பெர்ணான்டஸ் மகன் லிவிஸ்டன் (26) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்