வீடியோக்களை ‘லைக்-ஷேர்’ செய்தால் பணம் தருவதாக நூதன மோசடி 3 பேர் கைது

போலியான செயலியை கொடுத்து துணிகரம் வீடியோக்களை ‘லைக்-ஷேர்’ செய்தால் பணம் தருவதாக நூதன மோசடி 3 பேர் கைது செய்தனர்.

Update: 2021-07-10 02:02 GMT
செங்குன்றம், 

சென்னையை அடுத்த மாதவரம் தணிகாசலம் நகரைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 28). இவர், திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருவல்லிக்கேணியை சேர்ந்த சையது பக்ரூதீன் (36), மீரான் மொய்தீன் (49), முகமது மானஸ் (21) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது.

இவர்கள் ‘ஷேர் மீ’ என்ற செல்போன் செயலியில் வரும் வீடியோக்களை ‘லைக்’ செய்து அதனை ‘ஸ்க்ரீன் ஷாட்’ எடுத்து ‘ஷேர்’ செய்தால் ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று தெரிவித்தனர். இதற்கு முன்பணமாக ரூ.30 ஆயிரம் கட்டவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதனை நம்பி அவர்களிடம் தினேஷ் பணத்தை கொடுத்தார். பின்னர் அவர்கள் குறிப்பிட்ட செயலியை அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுத்தனர். தினேஷ் அந்த செயலியில் உள்ள வீடியோக்களை ‘லைக்’ செய்து ‘ஷேர்’ செய்தார். சிறிது நேரத்தில் அந்த செயலி சரிவர செயல்படவில்லை. அது போலியான செயலி என்பது தெரிந்தது.

சையது பக்ரூதீன் உள்பட 3 பேரும் நூதன முறையில் தன்னிடம் போலியான செயலி மூலம் பண மோசடி செய்திருப்பது தெரிந்தது. இது குறித்து தினேஷ் அளித்த புகாரின்பேரில் மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது பக்ரூதீன், மீரான் மொய்தீன், முகமது மானஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்