ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 103 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 215 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 114 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 28 ஆயிரத்து 201 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
நேற்று தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இறந்தனர். இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 169 ஆக உயர்ந்தது. தற்போது 845 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமுள்ள 341 ஆக்சிஜன் படுக்கைகளில் 91 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 250 படுக்கைகள் காலியாக இருக்கிறது.