சேலம் மாவட்டத்தில் 191 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் நேற்று 191 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 191 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 205 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று புதிதாக 191 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதியில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே போன்று தாரமங்கலத்தில் ஒருவர், காடையாம்பட்டி, சேலம் ஒன்றியம், சங்ககிரி ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், எடப்பாடியில் 3 பேர், மேச்சேரியில் 4 பேர், கொங்கணாபுரத்தில் 5 பேர், கொளத்தூரில் 6 பேர், வீரபாண்டியில் 7 பேர், ஓமலூரில் 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சிகிச்சை
மேலும், ஆத்தூர் நகராட்சி பகுதியில் 2 பேரும், தலைவாசலில் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 2,175 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.