கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி

கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-07-09 21:14 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 56 வயதுடைய ஆண் ஒருவரும், 58 வயதுடைய பெண் ஒருவரும் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 172 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 739 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் நேற்று யாருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்