கோவையில் 349 பேருக்கு கொரோனா; 5 பேர் பலி

கோவையில் புதிதாக 349 பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும் 5 பேர் பலியாகினர்.

Update: 2021-07-09 21:06 GMT
கோவை

கோவையில் புதிதாக 349 பேருக்கு கொரோனா உறுதியானது.  மேலும் 5 பேர் பலியாகினர். நீலகிரியில் கொரோனாவுக்கு 2 பேர் இறந்தனர். 

349 பேருக்கு கொரோனா

கோவையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 349 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 24 ஆயிரத்து 376-ஆக அதிகரித்தது. 

மேலும் 55 வயது பெண், 49 வயது ஆண் மற்றும் 66, 73, 83 வயதுடைய முதியவர்கள் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதன்படி மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,097-ஆக உயர்ந்தது.

இதுதவிர கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 346 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை 2 லட்சத்து 18 ஆயிரத்து 158 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,121- ஆக உள்ளது.

நீலகிரியில் 2 பேர் பலி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29 ஆயிரத்து 215 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 114 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 28 ஆயிரத்து 201 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

 நேற்று தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இறந்தனர். இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 169 ஆக உயர்ந்தது. தற்போது 845 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமுள்ள 341 ஆக்சிஜன் படுக்கைகளில் 91 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 250 படுக்கைகள் காலியாக இருக்கிறது.

மேலும் செய்திகள்