தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
கோவையில் தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் பாலகிருஷ்ணன் காந்திபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விடுதி ஊழியர்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாலகிருஷ்ணன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தனது கணவரின் சாவில் மர்மம் உள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.