மது குடிக்க பணம் கொடுக்காததால் தாய் அடித்துக்கொலை; வாலிபர் கைது
மது குடிக்க பணம் தர மறுத்த தாயை அடித்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சித்ரதுர்கா: சித்ரதுர்கா மாவட்டம் முலகால்மூரு டவுனை சேர்ந்தவர் ரத்னம்மா(வயது 45). இவரது மகன் லோகேஷ்(25). குடிபோதைக்கு அடிமையான லோகேஷ் தினமும் மதுகுடித்துவிட்டு வந்து ரத்னம்மாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். அதுபோல் நேற்று முன்தினம் இரவும் குடிபோதையில் வீட்டுக்கு வந்த லோகேஷ் தனது தாயிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார்.
ஆனால் அவர் பணம் கொடுக்காமல், லோகேசை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ், ரத்னம்மாவை அடித்துக்கொலை செய்தார். இதுதொடர்பாக முலகால்மூரு போலீசார் வழக்குப்பதிந்து லோகேசை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.