தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-07-09 19:57 GMT
கரூர்
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் புஞ்சைபுகளூர் பேரூராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காலை பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாத ஊதியத்தை வங்கிக்கணக்கில் செலுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்