பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நொய்யல்
கரூர் மாவட்டம் மூலிமங்கலம் அருகே உள்ள டி.என்.பி.எல். சிமெண்டு ஆலை பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த புங்கோடை காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி (வயது 47), வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விஷ்வா என்கிற சூர்யா (30), அண்ணா நகரைச் சேர்ந்த ரமேஷ் மகன் கார்த்திக் (33) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.260 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.