மன்னார்குடி பஸ் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
நெறிமுறைகளை பயன்படுத்தி பஸ்கள் இயக்கப்படுகிறதா? என மன்னார்குடி பஸ்நிலையத்தில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
மன்னார்குடி;
நெறிமுறைகளை பயன்படுத்தி பஸ்கள் இயக்கப்படுகிறதா? என மன்னார்குடி பஸ்நிலையத்தில் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
ஆய்வு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கொரோனா
கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படுகிறதா? என மன்னார்குடி பஸ் நிலையத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பஸ்களில் பயணம் செய்யும் பொது மக்கள் முககவசம் அணிந்து உள்ளனரா? சமூக இடைவெளியை கடைபிடித்து பயணம் நடைபெறுகிறதா? எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
சுகாதாரம்
மேலும் பஸ் நிலையத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் சுகாதாரம் தொடர்பாகவும் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் மன்னார்குடி பஸ் நிலையத்தில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.