135 பேருக்கு திருமண நிதி உதவி

கம்பத்தில் 135 பேருக்கு திருமண நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.

Update: 2021-07-09 17:24 GMT
தேனி : 

தேனி மாவட்டம் கம்பத்தில் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, 135 பேருக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கத்தை வழங்கினார். 

விழாவில் அவர் பேசுகையில், கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த படித்த ஏழை பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவியுடன் 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 135 பேருக்கு திருமணநிதி உதவியாக ரூ.33 லட்சத்து 75 ஆயிரமும், 1,080 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

 விழாவில் கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் பழனிமணி கணேசன் (கம்பம்), நிவேதா அண்ணாத்துரை (சின்னமனூர்), தாசில்தார் உதயராணி, தி.மு.க. நகர செயலாளர்கள் துரை நெப்போலியன், சூர்யாசெல்வகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்