ஓடும் பஸ்சில் முதியவர் சாவு

ஓடும் பஸ்சில் முதியவர் சாவு

Update: 2021-07-09 17:04 GMT
அரிமளம், ஜூலை.10-
அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி கிராமத்திற்கு நேற்று  அதிகாலை அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஏறி அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். பயணத்தின்போது நடத்துனரிடம் கே.புதுப்பட்டிக்கு செல்ல வேண்டும் என பயணச்சீட்டு பெற்று உள்ளார். இந்நிலையில் கே.புதுப்பட்டி நிறுத்தத்தில்பஸ் நின்றது. பயணிகள் அனைவரும் இறங்கினர். ஆனால் முதியவர் மட்டும் இறங்காமல் இருக்கவே நடத்துனர் அருகே சென்று அவரை இறங்குமாறு நடத்துனர் கூறி உள்ளார். ஆனால் அந்த முதியவர் எந்த அசைவும் இல்லாமல் சீட்டில் உறங்குவது போல் இருந்ததால் உடனடியாக கே. புதுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அங்கு வந்து பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது. ஓடும் பஸ்சில் அவர் திடீரென இறந்துள்ளார். இதையடுத்து அவர் வைத்திருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்து பார்த்தபோது அதில் அந்த முதியவரின் வீட்டு முகவரி இருந்தது. அதில் தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தபோது கோவையை  சேர்ந்த மலைராஜ் (வயது 71) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்