வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு

முதுகுளத்தூர் பகுதியில் வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2021-07-09 16:20 GMT
முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் அருகே உள்ள கீழகுளம் கிராமத்திற்கு உட்பட்ட கேழல் கிராமத்தில் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டத்தின் கீழ் பருத்தி அறுவடை பரிசோதனை மேற்கொள்வதை மாவட்ட வேளாண்ைம துணை இயக்குனர் டாம்பி சைலேஸ் ஆய்வு செய்தார். பருத்தியில் காணப்படும் பூச்சி நோய் தாக்குதல் மற்றும் பருத்தி விற்பனை செய்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார். கேழல், கீழகன்னிசேரி, வளநாடு ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ் பருத்தி பயிரில் பூச்சி வேளாண்மை செயல்விளக்க திடல் களை ஆய்வு செய்தார். கருமல் கிராமத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு இருந்த மழைத்தூவான் கருவியின் செயல்பாட்டினை ஆய்வுசெய்து  ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனே அலுவலர்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர்கள் செல்வம், மயில், முதுகுளத்தூர் வட்டார வேளாண்மை துணை இயக்குனர் கேசவராமன் உள்பட  வேளாண்மை துணை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்