கடையில் பணம் திருட்டு
சிவகாசி அருகே உள்ள பழைய இரும்பு கடையில் பணத்தை திருடி சென்றனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவரது பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் உள்ளது. இதில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர், கடையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி சென்று விட்டார். இதுகுறித்து முருகன், சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.