ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட குழு செயலாளர் மாடசாமி தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் வேளாண் சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரியும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல மத்திய அரசை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் சசிக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர்மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் நகர செயலாளர் மைக்கேல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.