விபத்தில் மாட்டு வியாபாரி தலைநசுங்கி பலி

விபத்தில் மாட்டு வியாபாரி தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-07-08 20:17 GMT
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள விசுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்சலாம்(வயது 51). மாட்டு வியாபாரியான இவர் நேற்று மாடு வாங்குவதற்காக திருமாந்துறை கிராமத்திற்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் வந்தார். சின்னாறு பாலத்தில் வந்தபோது பின்னால் வந்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அப்துல்சலாம் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அப்துல்சலாமின் மகன் முகமது அபுதாஹிர் கொடுத்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் அப்துல்சலாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்