கொரோனாவுக்கு மூதாட்டி பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தார்.

Update: 2021-07-08 20:17 GMT
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குன்னம் தாலுகா ஆயிக்குடி வடக்குத்தெருவை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 204 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் 24 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 204 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 813 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று 1,568 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்