கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2021-07-08 19:09 GMT
கரூர்
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர். அந்தவகையில் நேற்று கரூர் பகுதியில் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தோகைமலை பகுதியில் ஆர்.டி.மலை சமுதாயக்கூடம், தாந்தோணி பகுதியில் லட்சுமணம்பட்டி தொடக்கப்பள்ளி, அரவக்குறிச்சி பகுதியில் யூனியன் இடைநிலைப்பள்ளி உள்ளிட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசி மட்டும் கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போடப்பட்டது. இதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

மேலும் செய்திகள்