ரெயில்வே மஸ்தூர் யூனியன் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ரெயில்வே மஸ்தூர் யூனியன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
சதன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். தலைவர் கணேசன், உதவி தலைவர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட தலைவர் சுப்பையா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
விரைவு ரெயில்கள், சரக்கு ரெயில்கள், ரெயில்நிலையம், ரெயில்வே உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணிகளை தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்தும், மத்திய அரசின் தனியார்மய கொள்கையை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். சங்க நிர்வாகிகள் சுந்தர், மாரிதாஸ், மகாராஜன், கண்ணன், ராமசுப்பிரமணியன், வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பொருளாளர் சிவபெருமாள் நன்றி கூறினார்.