துறையூரில் பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது கார், 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
துறையூரில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு கார், 4 மோட்டார் சைக்கிள்கள், ரூ.34 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
துறையூர்,
துறையூர் பஸ் நிலையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது, ஒரு அறையில் பணம் வைத்து 5 பேர் சூதாடிக்கொண்டிருந்தனர். இதுதொடர்பாக வினோத்(வயது 46), நாகராஜ்(42), ரவி(43), சந்திரசேகர்(50), சந்திரன்(40) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரு கார், 4 மோட்டார் சைக்கிள்கள், ரூ.34 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் துறையூர் விநாயகர் கோவில் தெருவில் பணம் வைத்து சூதாடியதாக சதீஷ்குமார்(32), அன்பழகன்(45), மணிகண்டன்(30), சரவணன்(25), இளங்கோவன் (30) ஆகியோரை துறையூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.170 பறிமுதல் செய்யப்பட்டது.