மனைவி இறந்த வேதனையில் கணவன் தற்கொலை ஓசூரில் பரிதாபம்
ஓசூரில் கொரோனாவுக்கு மனைவி இறந்த வேதனையில் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:
தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தசரத்குமார் (வயது 22). கட்டிட தொழிலாளி. ஓசூர் சிப்காட் பகுதியில் பேகேபள்ளியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது.
கடந்த மே மாதம் 24-ந் தேதி தசரத்குமாரின் மனைவி கொரோனாவுக்கு பலியானார். அன்று முதல் மனைவி நினைவாகவே இருந்து வந்த அவர், சரியாக வேலைக்கு செல்லாமல் விரக்தியுடன் காணப்பட்டதாக தெரிகிறது.
தற்கொலை
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் தசரத்குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை அங்கு சென்ற தசரத்குமாரின் தந்தை வெங்கடேசன் மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.
அவரது அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் விரைந்து வந்தனர். தசரத்குமாரின் உடலை மீட்டு பிரே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.