மர்மமான முறையில் இறந்த 2 பசு மாடுகள்

வருசநாடு அருகே மர்மமான முறையில் 2 பசுமாடுகள் இறந்தன. அந்த மாடுகள் குடித்த தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

Update: 2021-07-08 17:45 GMT
தேனி : 

தேனி மாவட்டம் வருசநாடு அருகே சிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் பிச்சைமணி. இவர் 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று அதிகாலை பசு மாடுகளிடம் பால் கறக்கப்பட்டது. 

பின்பு வீட்டில் இருந்த தொட்டியில் 2 பசு மாடுகளும் தண்ணீர் குடித்தது. சிறிது நேரத்தில் 2 பசு மாடுகளும் அடுத்தடுத்து மர்மமான முறையில் பரிதாபமாக உயிரிழந்தது. 

இதற்கிடையே வருசநாடு போலீசில் பிச்சைமணி புகார் கொடுத்தார். அதில் தண்ணீர் தொட்டியில் மர்ம நபர்கள் விஷம் கலந்து இருக்கலாம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

 இதையடுத்து சம்பவ இடத்திற்கு கால்நடை டாக்டர் மதுசூதனன் வரவழைக்கப்பட்டு பசு மாடுகளின் உடல்களை பரிசோதனை செய்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்