51 பேருக்கு கொரோனா பாதிப்பு

மதுரை மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-07-08 17:04 GMT
மதுரை,ஜூலை
மதுரை மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்தனர்.
5 ஆயிரம் பரிசோதனை
மதுரை மாவட்டத்தில் நேற்று சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 35 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். அதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று ஒரே நாளில் 74 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீட்டிற்கு திரும்பினர். இதில் 58 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 111 ஆக உயர்ந்துள்ளது. 
சிகிச்சையில் உள்ளோர்
மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
அதன்படி நேற்று மதுரையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 565 பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் மதுரையில் நேற்று 4 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்தனர். இது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1138 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்