இ-பாஸ் இன்றி காரில் வந்தவர்களுக்கு அபராதம்
கேரளாவில் இருந்து இ-பாஸ் இன்றி காரில் வந்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து, அவர்களை திரும்ப அனுப்பினர்.
பந்தலூர்,
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வர இ-பாஸ் நடைமுறை தொடர்கிறது. இந்த நிலையில் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே சோலாடி சோதனைச்சாவடியில் துணை தாசில்தார் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரளாவில் இருந்து வந்த காரை நிறுத்தி, அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் இ-பாஸ் இன்றி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, அவர்களை திரும்ப அனுப்பினர்.