கோத்தகிரியில் பலத்த மழை

கோத்தகிரியில் பலத்த மழை பெய்தது.

Update: 2021-07-08 16:46 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் கோத்தகிரி அருகே உள்ள மசக்கல் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மசக்கல் அருகே உள்ள அரங்கிபுதூர் பகுதியில் தாழ்வான இடத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. 

இதில் அங்கு பயிரிடப்பட்டு இருந்த உருளைக்கிழங்கு பயிர்கள் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் வெள்ளைப்பூண்டு பயிரிடப்பட்ட தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக அவை சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

மேலும் செய்திகள்