டிராக்டர்கள் பறிமுதல்

மணல் அள்ளிய டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-07-08 16:32 GMT
தொண்டி
திருவாடானை தாலுகாவில் தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மணல் திருட்டை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஓரியூர் பாம்பாற்றில் வன்னிமரம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.இதைதொடர்ந்து மண்டல துணை தாசில்தார் சேதுராமன் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் அப் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மணல் அள்ளிக்கொண்டு இருந்த 3 டிராக்டர்களை பறிமுதல் செய்ததுடன் ஓரியூர் பாண்டி என்பவரை கைது செய்தனர். இது தொடர்பாக எஸ்.பி.பட்டினம் போலீசார் மேலும் 4 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்