பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சையில், காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-08 15:28 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை ஆற்றுப்பாலம் பெட்ரோல் பங்க் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர் ஜேம்ஸ், துணைத்தலைவர் லட்சுமிநாராயணன், மகிளா காங்கிரஸ் தலைவி சித்ராசாமிநாதன், வல்லம் நகர தலைவர் பாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும். ரபேல் போர் விமான முறைகேடு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அனைத்து பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கண்ணன், ராஜூ, சிதம்பரம், ஆதிநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் பழனியப்பன் நன்றி கூறினர்.

மேலும் செய்திகள்