திருவையாறு அருகே பாம்பு கடித்து தொழிலாளி சாவு

திருவையாறு அருகே பாம்பு கடித்து தொழிலாளி பரிதாபமாக சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2021-07-08 10:50 GMT
திருவையாறு,

திருவையாறை அடுத்த வீரசிங்கம்பேட்டை அண்ணாதிடலை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது48). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டு கொல்லையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது கோவிந்தராஜை பாம்பு கடித்தது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து கோவிந்தராஜ் மகன் சீனிவாசன் (25) நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் சிசாரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்