நண்பர்களுடன் கூட்டாஞ்சோறு சமைத்த போது உடலில் தீக்காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி சாவு

நண்பர்களுடன் கூட்டாஞ்சோறு சமைத்த போது உடலில் தீக்காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-07-08 03:01 GMT

மலைக்கோட்டை, 
திருச்சி இ.பி.ரோடு விறகு பேட்டை, பாரதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் மகன் ஸ்ரீ சாம் (வயது 13). இவர் கிலேதார் தெருவில் உள்ள மேரிஸ் தோப்பு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி மாலை சக நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள முருகேசன் என்பவரது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருக்கும்போது மண்சட்டியில் கூட்டாஞ்சோறு ஆக்குவதற்காக மண்சட்டியை பற்ற வைப்பதற்காக சானிடைசர் ஊற்றி பற்ற வைத்துள்ளார். 
அப்போது திடீரென தீப்பற்றியதில் ஸ்ரீசாமின் உடலில் தீக்காயம் ஏற்பட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்