திருச்சி மாநகர்- புறநகரில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்கள் குறித்த விவரத்தை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருச்சி,
திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்கள் குறித்த விவரத்தை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி முகாம்
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) 4 இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் இந்த முகாம்களில் ஒவ்வொரு முகாமிற்கும் தலா 400 தடுப்பூசிகள் வீதம் மொத்தம் 1,600 கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.
ஸ்ரீரங்கம் கோட்டத்தில் விக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியமங்கலம் கோட்டத்தில் சவேரியார் நடுநிலைப்பள்ளி, வரகனேரி பஜார், பொன்மலை கோட்டத்தில் ஆர்சர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உழவர்சந்தை எதிரில் கே.கே.நகர், கோ-அபிஷேகபுரம் கோட்டம் தென்னூர் இ.பி. அலுவலகம் எதிர்புறம் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது.
திருச்சி புறநகர்
இதேபோல் திருச்சி புறநகரில் இன்று (வியாழக்கிழமை) 3 இடங்களில் கோவேக்சின் 2-வது டோஸ் மட்டும் போடப்படுகிறது. நவல்பட்டு பர்மாகாலனி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, இனாம்குளத்தூர் மலைப்பட்டி கம்யூனிட்டி ஹால், மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் தலா 300 தடுப்பூசிகள் வீதம் மொத்தம் 900 தடுப்பூசிகள் போடப்படுகிறது என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.