கோனேரிப்பட்டியில் ரூ.33 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம்
கோனேரிப்பட்டியில் ரூ.33 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் போனது.
தேவூர்:
கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தின் பருத்தி விற்பனை சேவை மையத்தில் நேற்று ஏலம் நடந்தது. நெடுங்குளம், கல்வடங்கம், பொன்னம்பாளையம், பூதப்பாடி, காவேரிபட்டி, கொட்டாயூர், தேவூர், கோனேரிப்பட்டி பகுதி விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 6 ஆயிரத்து 650 ரூபாய் முதல் அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 140 வரை ஏலம் போனது. மொத்தம் 1,204 பருத்தி மூட்டைகளும் 33 லட்சத்து 41 ஆயிரத்து 950 ரூபாய்க்கு ஏலம் போனது.