கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது

Update: 2021-07-07 22:59 GMT
எலச்சிபாளையம்:
 சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவர் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்தியதாக திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் கவுதம் 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து மகளிர் போலீசார் சிறுமியை மீட்டனர். தொடர்ந்து கவுதமை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
======

மேலும் செய்திகள்