தடுப்பூசி போடும் இடம் மாற்றம்
விருதுநகரில் கொரோனா தடுப்பூசி போடும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடும் இடம் கொரோனா பரிசோதனை மையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் தடுப்பூசி போட வருபவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் கூறப்பட்ட நிலையில் தற்போது தடுப்பூசி போடும் இடம் உள்ள மகப்பேறு மருத்துவ பிரிவு கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி தெரிவித்துள்ளார்.