30 மரங்கள் சாய்ந்தன

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த மழையினால் 30 மரங்கள் சாய்ந்தன.

Update: 2021-07-07 19:43 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் 30-க்கும் மேற்பட்ட மரங்கள் ரோட்டில் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை தீயணைப்பு துறை நகராட்சி ஊழியர்கள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல சேதமடைந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் துரிதமாக மின்சார ஊழியர்கள் செயல்பட்டு மின்சாரம் கிடைக்க வழிவகை செய்தனர்.

மேலும் செய்திகள்