விளையாட்டு பொருட்கள் விற்பனை கடையில் திருட்டு
விளையாட்டு பொருட்கள் விற்பனை கடையில் திருட்டு
மதுரை
மதுரை புதூர் சம்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர்பாதுஷா (வயது 45). இவர் அண்ணாநகர் மெயின்ரோட்டில் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் காசிநாதன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதம் கடைகளை பூட்டி விட்டு தற்போது தான் கடைகளை திறந்துள்ளார். அன்றைய தினம் அவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த கம்ப்யூட்டர், 3 ஏ.சி.எந்திரங்கள் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டு இருந்தன. அதுகுறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது கடையில் இருந்த பொருட்கள் திருட்டு போனது குறித்து ஊழியர் காசிநாதன் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்து இருந்தார். அதன் பேரில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.