ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் அகற்றம்
ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் அகற்றம்
பேரையூர்
பேரையூர் தாலுகாவில் உள்ள சாப்டூர் வடகரைப்பட்டியில் மயானம் உள்ள இடத்தில் வீடுகள் மற்றும் கடைகள் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்து வந்தது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் நேரில் பார்வையிட்டு விசாரணை செய்தார். பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். கோட்டாட்சியர் உத்தரவின்பேரில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. சேடபட்டி மண்டல துணை வட்டாட்சியர் பிரேம் கிஷோர், துணை வட்டாட்சியர் வீரமுருகன், அத்திபட்டி வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், பேரையூர் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா, அத்திபட்டி உள்வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், சாப்டூர் ஊராட்சி அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை, போலீசார், கொண்ட குழுவினர் கண்காணிப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை எந்திரம் கொண்டு அகற்றினார்கள். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.