உளுந்தூர்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
உளுந்தூர்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகர் ரெயில் நிலையம் அருகே உளுந்தூர்பேட்டை-சென்னை இணைப்பு சாலை ரெயில்வே மேம்பாலத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் தூக்கில் இருந்து முதியவரின் உடலை இறக்கி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த மூர்த்தி(வயது 65) என்பது தெரியவந்தது. ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? இது குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.