ஆட்டோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆட்டோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-07-07 17:14 GMT
சாயல்குடி, 
சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆட்டோ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிக்கல் ஆட்டோ சங்கத் தலைவர்கள் கருப்பசாமி, ஜெயக்குமார் தலைமை தாங்கினர். ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சிவாஜி சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் பச்சமால், சுடலை காசிராஜன், விவசாய சங்க செயலாளர் சுப்பிர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சாலை போக்குவரத்து மாநில குழு உறுப்பினர் அனந்த்பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்