சீர்காழியில் குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு உரம் - பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்

சீர்காழியில் குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு உரங்களை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2021-07-07 11:10 GMT
சீர்காழி, 

சீர்காழி அருகே செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் முழு மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ் ஆகிய உரங்களை வழங்கினார். இதில் ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் வரவேற்றார். இதில் மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், கூட்டுறவு வங்கி செயலாளர் சக்கரவர்த்தி, உதவியாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் சின்னண்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்