மருத்துவச் சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது
மருத்துவச் சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது.
திரு.வி.க. நகர்,
விழுப்புரம் வண்டி மேடு பகுதியை சேர்ந்தவர் நவுசாத் (வயது 48). இவரது நண்பர் வடிவேலு என்பவர் மூலம் சென்னை பாலவாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீபதி (39)என்பவர் நவுசாத்துக்கு அறிமுகமானார். இதையடுத்து விழுப்புரத்தில் உள்ள வாகன விற்பனை நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வரும் ஸ்ரீபதி, நவுசாத் மகன் ஷாருக் என்பவருக்கு முகப்பேருக்கு வரவழைத்து மருத்துவ கல்லூரியில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.3 லட்சம் பெற்றுள்ளார்.இந்த நிலையில், 8 மாதங்கள் ஆன நிலையில் மருத்துவ சீட் வாங்கித் தராமல், தந்த பணத்தையும் திருப்பித் தராமல் ஸ்ரீபதி ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், ஜெ.ஜெ.நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் ஸ்ரீபதியை கைது செய்து விசாரணை நடத்தினார். அவர் பணம் வாங்கி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.