காதலனை கரம் பிடித்த பா.ஜனதா முன்னாள் கவுன்சிலர் மகள்
உப்பள்ளியில் வீட்டை விட்டு வெளியேறி பா.ஜனதா முன்னாள் கவுன்சிலரின் மகள், காதலனை கரம் பிடித்துள்ளார். அவா்கள் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர்.
உப்பள்ளி: உப்பள்ளியில் வீட்டை விட்டு வெளியேறி பா.ஜனதா முன்னாள் கவுன்சிலரின் மகள், காதலனை கரம் பிடித்துள்ளார். அவா்கள் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர்.
வீட்டை விட்டு வெளியேறி திருமணம்
உப்பள்ளியை சேர்ந்தவர் ராஜண்ணா கார்வி. பா.ஜனதாவை சேர்ந்த இவர், முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவருடைய மகள் மோனல் கார்வி. இந்த நிலையில் மோனலும், அதேப்பகுதியை சேர்ந்தவர் ராகுல் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் ராஜண்ணாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காதல் ஜோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு ெவளியேறினர். பின்னர், அவர்கள் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர்.
கமிஷனரிடம் மனு
இதையடுத்து காதல் திருமணம் ெசய்துெகாண்ட ராகுல், மோனல் நேற்று முன்தினம் மாலை உப்பள்ளியில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனா். அவர்கள், கமிஷனர் லாபுராமை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். எங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எங்களை காப்பாற்ற வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.
அந்த மனுவை வாங்கி கொண்ட போலீஸ் கமிஷனர் லாபுராம், பாதுகாப்பு கொடுப்பதாக உறுதி அளித்தார். முன்னாள் கவுன்சிலர் மகள், வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்துெகாண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.