டோனியின் உருவப்படத்தை கையில் பச்சை குத்திய கர்நாடக ரசிகர்

டோனியின் உருவத்தை கையில் பச்சை குத்திய ரசிகர்.

Update: 2021-07-06 21:04 GMT
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திரசிங் டோனி. அவர் இன்று (புதன்கிழமை) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு ரசிகர் ஒருபடி மேலே சென்று டோனியின் உருவப்படத்தை தனது கையில் பச்சை குத்தி உள்ளார். அதுவும் அவர் தமிழக ரசிகர் அல்ல, கர்நாடக ரசிகர் என்பது சுவாரசியம். அந்த ரசிகர் பற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கூட்லகியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் டோனியின் தீவிர ரசிகர் ஆவார். இந்த நிலையில் டோனியின் பிறந்தநாளையொட்டி ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரை சேர்ந்த பிரபல பச்சை குத்தும் நிபுணர் சங்கரை சந்தித்து பேசிய வெங்கடேஷ் தனது கையில் டோனியின் உருவப்படத்தை வரைய வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதன்படி வெங்கடேஷ் கையில் டோனியின் உருவப்படத்தை சங்கர் வரைந்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

மேலும் செய்திகள்